கேளம்பாக்கம் அருகே மதுக்கடையை சூறையாடிய 9 பேர் கைது
கேளம்பாக்கம் அருகே புதிய மதுக்கடையை பொதுமக்கள் அடித்து நொறுக்கி சூறையாடினர். இது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்போரூர்,
நெடுஞ்சாலை ஓரம் உள்ள மதுக்கடைகளை மூடவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தில் நெடுஞ்சாலை ஓரம் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டன. அந்த மதுக்கடைகளை குடியிருப்பு பகுதியில் திறப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்தநிலையில் காஞ்சீபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தை அடுத்த படூர் ஊராட்சியில் நேற்றுமுன்தினம் புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டது.
இந்த கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி பொதுமக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் மதுக்கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுபாட்டில்கள் நொறுக்கப்பட்டன
அப்போது மதுக்கடை ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பொதுமக்கள் அந்த மதுக்கடையை அடித்து நொறுக்கினர். இதில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கேளம்பாக்கம் போலீசார் பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 4 பெண்கள் மதுக்கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை அங்கிருந்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்போரூர் தாசில்தார் விமல்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.
கைது
இதுகுறித்து படூர் ஊராட்சி பொதுமக்கள் கூறுகையில், எங்களுக்கு இந்த மதுக்கடை தேவை இல்லை. கடை இங்கு இருப்பதால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகும். குற்றச்சம்பவங்கள் நடைபெறும். எனவே இந்த மதுக்கடையை உடனே மூடவேண்டும் என்று வலியுறுத்தினர்.
மதுக்கடை சூறையாடப்பட்டது தொடர்பாக மதுக்கடை ஊழியர்கள் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மதுக்கடை சூறையாடியது தொடர்பாக 60 பெண்கள், 72 ஆண்கள் என்று 132 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் பிரகாஷ் (வயது 32), மற்றொரு பிரகாஷ்(28), பரமசிவம் (52), கார்த்திக்(31), சபாபதி (43), அரிகிருஷ்ணன் (38), தினேஷ் (31), குமரேசன் (33), குப்பன் (48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.