தனியார் நிறுவன ஊழியரின் மடிக்கணினியை திருடியவர் கைது
திருச்சி உறையூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 25). இவர் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு சப்பாத்தி கடையில் வாசுதேவன் தனது மடிக்கணினியை வ
திருச்சி,
திருச்சி உறையூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 25). இவர் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு சப்பாத்தி கடையில் வாசுதேவன் தனது மடிக்கணினியை வைத்து விட்டு கடைக்காரரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் மடிக்கணினியை திருடி விட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வாசுதேவன் தப்பியோடியவரை அவ்வழியாக சென்றவர்கள் உதவியுடன் கையும், களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்து கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் ராம்ஜி நகர் மில் காலனியை சேர்ந்த கணேசன் (40) என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் உமாசங்கரி வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர்.