நாமக்கல்லில் உலக திருநங்கைகள் தினம் கேக் வெட்டி கொண்டாட்டம்

நாமக்கல்லில் இதயம் திருநங்கைகள் முன்னேற்ற சங்கம் செயல்பட்டு வருகிறது.

Update: 2017-04-16 23:00 GMT

நாமக்கல்,

நாமக்கல்லில் இதயம் திருநங்கைகள் முன்னேற்ற சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கம் சார்பில் உலக திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு நாமக்கல்லில் பல்வேறு பகுதிகளில் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் திருநங்கைகள் கொண்டாடினர்.

நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட மூத்த திருநங்கைகள் துளசிநாயக், வடிவுநாயக் ஆகியோர் தலைமை தாங்கினர். மேலும் திருநங்கைகள் பற்றிய பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது. இதில் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்கள், தொண்டு நிறுவனத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்