கர்நாடக மாநில மதுபான பாக்கெட்டுகள் வீட்டில் பதுக்கல்: கணவன்–மனைவி உள்பட 3 பேர் கைது
நங்கவள்ளி அருகே பெரியசோரகை குட்டிக்கரடு பகுதியில் உள்ள 2 வீடுகளில்
மேச்சேரி,
நங்கவள்ளி அருகே பெரியசோரகை குட்டிக்கரடு பகுதியில் உள்ள 2 வீடுகளில் கர்நாடக மாநில மதுபான பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக நங்கவள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு மாதையன் (வயது 55), அவருடைய மனைவி அலமேலு (50) மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த சின்னபொண்ணு (55) ஆகியோர் வீட்டில் கர்நாடக மாநில மதுபான பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாதையன், அலமேலு, சின்னபொண்ணு ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 158 மதுபான பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.