டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக முன்னாள் மாணவர் அமைப்பினர் உண்ணாவிரதம்
டெல்லியில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
எடப்பாடி,
டெல்லியில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று எடப்பாடி பஸ் நிலையத்தில் முன்னாள் மாணவர்கள் அமைப்பை சேர்ந்த சிலர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர். இது பற்றி தகவலறிந்த எடப்பாடி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டம் நடத்தக்கூடாது என கூறினர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.