ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

Update: 2017-04-16 22:45 GMT

காளையார்கோவில்,

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகிறார்கள். இந்த பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே சிறப்பு திருப்பலி நடைபெற்று, நேற்று காலை வரை நடைபெற்றது. இதேபோல் சிவகங்கை மாவட்டத்திலும் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு திருப்பலியுடன் கொண்டாடப்பட்டது.

காளையார்கோவில் புனித அருளானந்தர் ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலியை பங்குத்தந்தை அற்புத அரசு, உதவி பங்குத்தந்தை ஜோசப் சார்லஸ் ஆகியோர் நடத்தினர். இதேபோல் சாத்தரசன்பட்டியில் புனித பனிமய மாதா ஆலயத்தில் அருட்தந்தை ஞானதாஸ் திருப்பலியை நடத்தினார்.

கிறிஸ்தவர்கள் வழிபாடு

ஆண்டிச்சியூரணியில் உள்ள புனித அடைக்கல மாதா ஆலயத்தில் பங்குத்தந்தை பாஸ்கர் டேவிட், அருட்தந்தை மைக்கேல் சிறப்பு திருப்பலியை நடத்தினர். பள்ளிதம்மம் சகாயநகர் பங்கு, சூசையப்பர்பட்டினம் பங்கு, கலைக்குளம், 15–ம் பங்கு ஆலயங்களிலும் ஈஸ்டர் திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

மேலும் செய்திகள்