முறிந்த திருமணமும்.. முறியாத மனமும்..
பார்வையிழந்த பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி பெண்களின் தன்னம்பிக்கைக்கே எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.
பார்வையிழந்த பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி பெண்களின் தன்னம்பிக்கைக்கே எடுத்துக்காட்டாக திகழ்கிறார். அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டபோது, மகிழ்ச்சியில் திளைத்தார். ஆனால் கணவராகப் போகிறவர் விதித்த கடுமையான நிபந்தனைகளால் கலங்கிப் போனார். ‘இசையை கைவிட்டால்தான் திருமணம் கைகூடும்’ என்ற நிலை உருவானதும், சிந்தித்தார். இசையை தேர்ந்தெடுத்தார். அதனால் நிச்சயதார்த்தம் முறிந்தது.
பொதுவாக இதுபோன்ற நெருக்கடிகளில் பெண்கள் நொறுங்கிப்போவார்கள். மனதளவில் தளர்ந்துபோவார்கள். ஆனால் விஜயலட்சுமி காயத்ரி வீணையை கையில் எடுத்து, 6 மணி நேரம் தொடர்ந்து இசைத்து 67 பாடல்களைப் பாடி உலக சாதனை படைத்துவிட்டு, உற்சாகம் குலையாமல் உலாவந்து கொண்டிருக்கிறார். அந்த சாதனையை பாராட்டி ‘வேர்ல்ட் ரிக்கார்டு யூனிவர்சிட்டி’ அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க இருக் கிறது.
கலங்காத மனதுடன் காட்சியளிக்கும் அவரிடம் சில கேள்விகள்:
உங்கள் திருமணம் தொடர்பான விஷயங் களில் உண்மையில் என்னதான் நடந்தது?
“முதலில் பேசிய சில விஷயங்களில் இருந்து அவர் பின்வாங்கினார். அவருக்கு பெற்றோர் இல்லை என்பதால் எங்கள் வீட்டில் அவர் வசிப்பார் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. நான் பத்திரிகையில் கொடுத்திருந்த வரன் தேவை என்ற விளம்பரத்தில் விண்ணப்பித்த 600 பேரில் இருந்து அவரை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். முதலில் அவரது சகோதரிதான் என்னிடம் பேசினார். நான் எல்லா விஷயங்களையும் மனந் திறந்து பேசினேன். ‘என்னோடு வீட்டில் வசிக்கவேண்டும். என் இசைப் பயணத்திற்கு எந்த தடையும் வரக்கூடாது. நான் இதைவிட உயரத்திற்கு செல்ல கைபிடித்து என்னை அழைத்துச் செல்ல வேண்டும்’ என்றேன். அதற்கெல்லாம் சம்மதித்தார்.
நிச்சயதார்த்தம் முடிந்து சில நாட்கள் ஆனதும் அவரது பேச்சில் மாற்றம் ஏற்பட்டது. அவரது வீட்டில் நான் வசிக்கவேண்டும் என்றார். நான் இசை ஆசிரியையாக வேலைக்கு போகவேண்டும் என்றார். பயம் உருவானது. நான் மறுத்தேன். அவரிடம் இருந்து நிராசைப்படுத்தக் கூடிய வார்த்தைகள் வந்தன. ‘கண்களுக்கு பார்வை வரும் என்று நம்பவேண்டாம். வீணாக மருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறாய்’ என்றும் சொன்னார். அப்போதுதான் நான், ‘நாம் இதில் இருந்து விலகிக்கொள்வோம்’ என்றேன்.
நம்மிடம் ஏமாற்றத்தை உருவாக்கும் விதத்தில் பேசினால் அதில் இருந்து விலகிக்கொள்வதுதானே நல்லது. தொடக்கமே இப்படி இருந்தால், கல்யாணம் நடந்துவிட்டால் நிலைமை என்னவாகும்?”
நிச்சயதார்த்தத்திற்கு பிறகு இப்படிப்பட்ட நெருக்கடிகள் வரும்போது, உங்களைப் போல் அதில் இருந்து விலகும் தைரியம் மற்ற பெண்களுக்கு வராது அல்லவா?
“நான் எடுத்த துணிச்சலான முடிவு இது. நான் என் முடிவை சொன்னதும் பெற்றோரும் அதை ஏற்றுக்கொண்டார்கள். அவரும், ‘உனக்கு பயமாக இருந்தால் விலகிக்கொள்’ என்றார். அதை பலமுறை அழுத்தமாக சொன்னார். அதனால் விலகுவது எளிதானது”
இந்த முடிவு உங்களுக்கு வருத்தத்தை தந்ததா?
“இல்லை. எனக்கு இப்போதுதான் மனசமாதானம் கிடைத்திருக்கிறது. முன்பு எனக்கு கல்யாணத்தை பற்றிய டென்ஷன் இருந்தது. கடவுளே திருமணத்தோடு என்னைவிட்டு எல்லாம் போய்விடுமோ என்று கவலைப்பட்டேன். வேண்டாம் என்று முடிவுசெய்ததும் மனம் அமைதியானது. அப்பாடா அது ஒழிந்துபோனது”
உங்கள் முடிவுக்கு எந்த அளவுக்கு ஆதரவு கிடைத்தது?
“நான் எடுத்த முடிவு சரிதான் என்று எல்லோரும் சொன்னார்கள். பலருக்கும் என் திருமணமுடிவில் முதலிலே விருப்பம் இல்லாமல் இருந்திருக்கிறது. நிச்சயதார்த்தத்திற்கு முன்பு அவர் எந்த நிபந்தனையும் விதித்த தில்லை. பின்புதான் மாறினார். அவரது மாமாக்கள் அனைவரும் சேர்ந்துதான் உறுதிசெய்தார்கள். அவர்கள் சொன்னதால்தான் திருமணத்திற்கு சம்மதித்ததாக என்னிடம் சொன்னார்”
விலகிவிடுவோம் என்று நீங்கள் சொன்னதும் அவரது மனநிலை எப்படி இருந்தது?
“முதலில் கோபம், பின்பு மிரட்டல், விரட்டுதல்... என்று தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் நான், விலகிவிடுவோம் என்றதும் அவரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. நான் பின்வாங்கும் விஷயத்தை கேள்விப்பட்டு அதற்கான காரணத்தை அறிய அவரது மாமாக்கள் எங்கள் வீட்டிற்கு வந்தார்கள். அவர்கள் சமரசம் பேச வந்திருந்தார்கள். நான் என் முடிவை கூறிவிட்டு, நடந்ததை எல்லாம் கூறினேன். அதன் பிறகு அவர்களால் எதுவும் பேசமுடியவில்லை”
உங்கள் வருங்கால கணவர் எப்படி இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
“எல்லா விதத்திலும் அவர் எனக்கு துணை நிற்கவேண்டும். ஒருவிதத்திலும் எனக்கு நிராசை ஏற்படுத்தக்கூடாது. என் இசை வாழ்க்கைக்கு ஒத்துழைக்க வேண்டும். மாறாக எனக்கு வேலைவைப்பதற்காக வந்து சேரக் கூடாது”
பிரச்சினைகள் வரும்போது அதில் இருந்து மீள உங்களுக்கு சக்தி தருவது எது?
“இசைதான் எனது சக்தி. இப்படி ஒரு முடிவினை எடுக்க என்னை தூண்டியதும் அதுதான். அப்போது மனம் மிகப்பெரிய அவஸ்தையை கொடுத்தது. பாடவும் முடியவில்லை. இப்போது நான் கட்டுகளில் இருந்து விடுபட்டதுபோல் உணர்கிறேன்”
பார்வையற்ற உங்களால் ஒரு ஆணின் சுபாவத்தை எப்படி புரிந்துகொள்ள முடிகிறது?
“பேச்சிலும், பழக்கவழக்கத்திலும் ஒருவரை என்னால் புரிந்துகொள்ள முடியும். ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது அவரது குரலில் ஏற்படும் மாற்றங்களைவைத்து அவரது சுபாவத்தை நான் புரிந்துகொள்வேன்”
திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
“திருமணத்தின் மூலம் எந்த அடிமைத் தனத்தையும் பெண்கள் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நம்முடைய திறமையை முடக் கிவைக்கும் விதத்தில் எதையும் செய்துவிடக் கூடாது. ஆண்கள் சொல்வதைக்கேட்டு உடனே கீழ்படிந்து விடக்கூடாது. எதையும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை பெண்களிடம் இருக்கவேண்டும்”