10–ம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள்களை திருடி விற்ற 4 வாலிபர்கள் கைது

10–ம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாளை திருடி விற்ற 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2017-04-15 21:40 GMT

மும்பை,

10–ம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாளை திருடி விற்ற 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விடைத்தாள்கள் திருட்டு

மும்பை, தகிசர் கிழக்கு பகுதியில் உள்ளது இஸ்ரா வித்யாலயா பள்ளி. இந்த பள்ளியின் முதல்வர் அறையில் இருந்த 516 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை பழைய பொருள் வியாபாரி என கூறிய ஒருவர் திருடி சென்றார். பொது தேர்வு விடை தாள் திருடப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விடைத்தாளை திருடி சென்றவரை தேடி வந்தனர்.

4 வாலிபர்கள் கைது

இந்தநிலையில் போலீசார் சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த போதை ஆசாமிகள் விக்ரம் (வயது 18), அதீப்சேக் (19) மற்றும் 2 மைனர் வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் பள்ளி முதல்வர் அறையில் இருந்த விடைத்தாள்களை திருடி அருகில் உள்ள பழைய பேப்பர் கடையில் விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் பழைய பேப்பர் கடையில் இருந்து 149 வரலாறு, 181 சமஸ்கிருதம் விடைத்தாள்கடை மீட்டனர். மீதமுள்ள விடைதாள்களை கண்டுபிடித்து மீட்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்