மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதால் வெறிச்சோடிய சின்னமுட்டம் துறைமுகம்

மீன்பிடி தடைக்காலம் நேற்று தொடங்கியது. இதனால் சின்னமுட்டம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டன.;

Update: 2017-04-15 22:45 GMT
கன்னியாகுமரி,


ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலங்களில் விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றால் மீன் இனம் அடியோடு அழிந்து விடும் என்று கருதி ஆண்டுதோறும் ஏப்ரல் 15–ந் தேதி முதல் மே மாதம் 29–ந் தேதி வரை தமிழகத்தின் கடற்கரை பகுதியான கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரை விசைப்படகுகள் ஆழ்கடலில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் இந்த ஆண்டு மீன்பிடி தடைக்காலம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதனால் கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழில் செய்து வரும் 350–க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

வெறிச்சோடியது


இந்த படகுகள் அனைத்தும் சின்னமுட்டம் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ன. விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாததால் மீன்பிடித்துறைமுகம் களை இழந்து வெறிச்சோடி காணப்படுகிறது. மீன்சந்தை ஏலக்கூடம் ஆள்நடமாட்டம் இன்றி காட்சி அளிக்கிறது.

மேலும் செய்திகள்