மினி வேனில் இருந்து பாரம் இறக்கும் போது கண்ணாடி உடலில் குத்தி டிரைவர் சாவு
மினி வேனில் இருந்து பாரம் இறக்கும் போது கண்ணாடி உடலில் குத்தி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.;
குளச்சல்,
தக்கலை அருகே உள்ள முளகுமூடு அன்ருட்டிவிளையை சேர்ந்தவர் ஹெலன் ராபர்ட் (வயது 65). இவர் அழகியமண்டபத்தில் உள்ள ஒரு கடைக்கு மினி வேன் ஓட்டி வந்தார். இவர் நேற்று மதியம் தனது மினி வேனில் கண்ணாடி பாரத்தை ஏற்றிக்கொண்டு குளச்சல் பஸ் நிலையம் அருகில் உள்ள பிளைவுட் கடைக்கு ஓட்டி சென்றார்.
அங்கு கடையின் முன் மினி வேனை நிறுத்தி, பாரத்தில் கட்டியிருந்த கயிறை அவிழ்த்து விட்டு இறக்க முயன்றார். அப்போது கண்ணாடி பாரம் ஹெலன் ராபர்ட் மீது சரிந்து விழுந்தது. இதனால் இடிபாடுகளில் அவர் சிக்கினார்.
சாவு
அப்போது அதில் இருந்த கண்ணாடிகள் உடைந்து அவர் உடலில் குத்தியது. இதில் ஹெலன் ராபர்ட் பரிதாபமாக இறந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், குளச்சல் போலீசார் அங்கு விரைந்து சென்று ஹெலன் ராபர்ட் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி ஹெலன் ராபர்ட் மகன் மெர்லிங் கலாஸ் குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் பிளைவுட் கடை உரிமையாளர் ராஜேஷ் ராஜன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.