பஸ்கள் நேருக்குநேர் மோதல் கல்லூரி மாணவ-மாணவிகள் 20 பேர் காயம்
ஆலங்குடி அருகே பஸ்கள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 20 மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனர்.
ஆலங்குடி,
புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி நோக்கி நேற்று ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் ஆலங்குடி அருகே உள்ள ஆயிப்பட்டி நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கி கொண்டிருந்தது. அப்போது பின்னால் வேகமாக வந்த ஒரு தனியார் பஸ், அரசு பஸ்சை முந்தி செல்ல முயன்றது.
அப்போது எதிரே கறம்பக்குடியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி மாணவ-மாணவிகளை ஏற்றி வந்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பஸ்சும், தனியார் பஸ்சும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக் கொண்டன.
20 பேர் காயம்
இதில் கல்லூரி பஸ்சில் பயணம் செய்த பாலிடெக்னிக் மாணவ, மாணவிகள் 20 பேர் காயம் அடைந்தனர். தனியார் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயம் அடைந்த 20 பேரையும் பொதுமக்கள் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் தனியார் பஸ் டிரைவரான கறம்பக்குடி கண்டியன் தெருவை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (வயது 33) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.