வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை திட்டிய வாலிபர் கைது

வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை திட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-04-15 20:49 GMT
வாய்மேடு,

நாகை மாவட்டம் வாய்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்திரசரஸ்வதி மற்றும் போலீசார், சம்பவத்தன்று வாய்மேடு துளசியாப்பட்டினம் பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார்சைக்கிள் வந்தது. அதை போலீசார் வழிமறித்து விசாரணை நடத்தினர். அப்போது மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்தவர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்திரசரஸ்வதியை தகாத வார்த்தைகளால் திட்டினார். மேலும் அவரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

கைது

இதில் அவர், அண்ணாப்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வேதையன் மகன் சுப்பிரமணியன் (வயது35) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஜெயந்திரசரஸ்வதி கொடுத்த புகாரின்பேரில் வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியனை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்