வீட்டின் கதவை உடைத்து 3½ பவுன் நகை- செல்போன் திருட்டு
திருச்சி கே.கே. நகரில் வீட்டின் கதவை உடைத்து 3½ பவுன் நகை- செல்போன் திருட்டு
திருச்சி,
திருச்சி கே.கே.நகர் அன்பில் தர்மலிங்கம் தெரு பகுதியை சேர்ந்தவர் குலாம். இவருடைய மனைவி அப்ரோஸ் பேகம் (வயது 29). குலாம் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அப்ரோஸ் பேகம் இரவு நேரங்களில் தனது குழந்தைகளுடன் ராஜாராம் சாலையில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கி விட்டு காலையில் மீண்டும் தனது வீட்டிற்கு திரும்புவது வழக்கம். நேற்று முன்தினம் மாலையில் வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு தனது பெற்றோர் வீட்டிற்கு தூங்குவதற்காக குழந்தை களுடன் அப்ரோஸ்பேகம் சென்றார். நேற்று காலை அவர் தனது வீட்டிற்கு வந்த போது கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பீரோவை பார்த்த போது அதில் இருந்த 3½ பவுன் தங்க நகைகள் மற்றும் செல்போன் திருட்டு போயிருந்தது. யாரோ மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகைகள் மற்றும் செல்போனை திருடி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக அப்ரோஸ் பேகம் கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.