நெல் விதை சுத்திகரிப்பு நிலையத்தில் அதிகாரி ஆய்வு
திருவாரூரில் உள்ள நெல் விதை சுத்திகரிப்பு நிலையத்தில் அதிகாரி ஆய்வு செய்தார்.
திருவாரூர்,
திருவாரூரில் உள்ள நெல் விதை சுத்திகரிப்பு நிலையத்தில் கோயம்புத்தூர் விதை சான்று துறை இணை இயக்குனர் சபாநடேசன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு நடைபெற்று வரும் நெல் சுத்திகரிப்பு பணிகளை பார்வையிட்ட அவர், விதை சான்று அலுவலர்களுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினார். இதையடுத்து விதை பகுப்பாய்வு நிலையம், எள், கடலை, உளுந்து ஆகிய பயிர்களுக்கான விதை பண்ணை ஆகிய இடங்களில் அவர் ஆய்வு நடத்தினார். பின்னர் காஞ்சிக்காட்டில் உள்ள விதை பண்ணை மற்றும் விதை சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது திருவாரூர் மாவட்ட விதை சான்று உதவி இயக்குனர் கல்யாணசுந்தரம் உடன் இருந்தார்.