திருவையாறில் விவசாயிகள் நல் ஏர் பூட்டி விவசாய பணியை தொடங்கினர்
தமிழ்ப்புத்தாண்டையொட்டி திருவையாறில் விவசாயிகள் நல் ஏர் பூட்டி விவசாய பணியை தொடங்கினர்.
திருவையாறு,
தமிழ்ப்புத்தாண்டையொட்டி சித்திரை மாதம் முதல் நாளில் பூமாதேவியையும் சூரியநாராயணனையும் வழி்பட்டு நல் ஏர் பூட்டி கிராமத்தில் விவசாயிகள் பணிகளை தொடங்குவர். அதேபோல் இந்த ஆண்டு நேற்று முன்தினம் சித்திரை மாதம் முதல் நாள் என்பதால் திருவையாறு அருகே சிறுபுலியூர் கிராமத்தில் மக்கள் ஒன்றிணைந்து கோவில் நிலத்தில் பழங்கள், எள், நெல், பயிர், ஏர் கலப்பை, மாட்டு வண்டி, டிராக்டர்கள், கயிறு, விவசாயத்திற்கு பயன்படுத்தக்கூடிய அனைத்து பொருட்களையும் வைத்து வழிபட்டனர்.
பின்னர் நிலத்தை உழவு செய்து பயிர், நெல் போன்ற தானியங்களை தெளித்து விவசாய பணியை தொடங்கினர்.
வாய்க்காலை தூர்வார வேண்டும்
கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் காலத்திற்கு ஏற்ப வருவதில்லை. எனவே இந்த ஆண்டாவது நல்ல மழை பெய்து, விவசாயம் நன்கு செழிப்பாக இருக்கும் என்று நம்புகிறோம். அந்தவகையில் தமிழக அரசு கர்நாடக அரசிடம் பேசி முன்னதாகவே தண்ணீர் திறந்துவிட்டால் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். இதற்கு மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் வாய்க்காலை சரியாக தூர்வாராததால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வருவது மிகவும் சிரமமாக உள்ளது. கால தாமதம் ஏற்படுத்தாமல் வாய்க்காலை தூர்வாரி விரைவில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.