சத்திரப்பட்டி அருகே மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகை

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகா, சத்திரப்பட்டியில் நெடுஞ்சாலையோரத்தில் டாஸ்மாக் மதுக்கடை இருந்தது. அந்த மதுக்கடை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் மூடப்பட்டது. இதையடுத்து வீரலப்பட்டிக்கு செல்லும் வழியில் சுடுகாடு அருகே மதுக்கடை அமைக்க அதிகாரிகள் முட

Update: 2017-04-15 21:45 GMT

சத்திரப்பட்டி

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகா, சத்திரப்பட்டியில் நெடுஞ்சாலையோரத்தில் டாஸ்மாக் மதுக்கடை இருந்தது. அந்த மதுக்கடை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் மூடப்பட்டது. இதையடுத்து வீரலப்பட்டிக்கு செல்லும் வழியில் சுடுகாடு அருகே மதுக்கடை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக அந்த பகுதியில் கட்டிடம் கட்டும் பணி நடக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி பொதுமக்கள் ஒட்டன்சத்திரம் தாசில்தார் மாரிமுத்து, கலால் கோட்ட அலுவலர் குளிவேல் ஆகியோரிடம் புகார் மனு கொடுத்தனர். மேலும் மதுக்கடைக்கு கட்டிடம் கட்டப்படும் இடத்துக்கும் சென்று பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து தாசில்தார் மாரிமுத்து, துணை தாசில்தார் முத்துசாமி, ஆயக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், சத்திரப்பட்டி சப்–இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது வீரலப்பட்டி பகுதியில் மதுக்கடை அமைந்தால் பள்ளி மாணவிகள், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படும், எனவே மதுக்கடையை அங்கு அமைக்கக்கூடாது என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து மதுக்கடை வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதிஅளித்தனர். இதனால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்