மழை பெய்ய வேண்டி முஸ்லிம்கள் சிறப்பு பிரார்த்தனை

மழை பெய்ய வேண்டி முஸ்லிம்கள் சிறப்பு பிரார்த்தனை

Update: 2017-04-15 22:15 GMT

நத்தம்,

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து விட்டது. இதனால் கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், ஆறுகள் மற்றும் கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து விவசாய பணிகள் அடியோடு பாதிககப்பட்டதுடன் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. திண்டுககல் மாவட்டம், நத்தம் வட்டாரத்தில் போதிய மழை பெய்யாமல் கடும் வறட்சியே நிலவி வருகிறது. இதனால் கால்நடைகளுககு தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் நத்தம்நகர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி நத்தம் அனைத்து ஜமாத்தை சேர்ந்த முஸ்லிம்கள் ஏராளமானோர் நத்தம் நல்லாகுளம் அருகில் உள்ள சந்தை மைதானத்தில் திரண்டு மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர்.

மேலும் செய்திகள்