போர்க்கப்பலை பார்க்க மெரினாவில் குவிந்த பொதுமக்கள்
மும்பையில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு நேற்று காலை வருகை தந்த ‘ஐ.என்.எஸ். சென்னை’ என்ற போர்க்கப்பலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை,
கடற்படை அதிகாரிகள், ஒரு சில பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கப்பலில் உள்ள நவீன ரக ஆயுதங்கள், ஏவுகணைகளை பார்வையிட்டனர். தொடர்ந்து இந்தக்கப்பலை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக மெரினா கடற்கரையில் இருந்து கடலில் 1 மைல் தூரத்தில் மின் அலங்காரத்துடன் நிறுத்தப்பட்டிருந்தது. உடன் பாதுகாப்புக்காக வந்த ஐ.என்.எஸ். ரேன்விஜய் மற்றும் ஐ.என்.எஸ். சுபிதா கப்பல்களும் அணிவகுத்து நின்றன. இதுபார்வையாளர்களை மிக கவர்ந்தது. கப்பல்களை பார்வையிட மெரினா கடற்கரையில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
பொறியியல் படிக்கும் மாணவிகள் சிலர் கூறும் போது, ‘இதுபோன்ற கப்பல்கள் அபூர்வமாக தான் சென்னைக்கு வருகின்றன. அவ்வாறு வரும் போது பாதுகாப்பு நலன் கருதி, வெகுதொலைவில் நிறுத்திவிட்டு பார்த்து விட்டு செல்லுங்கள் என்று கூறுவதை ஏற்க முடியாது. குறைந்தபட்சம் பொறியியல் மற்றும் ராணுவம் தொடர்பாக படிக்கும் மாணவர்களை துறைமுகத்தில் அனுமதித்து கப்பலை பார்வையிட அனுமதி வழங்கியிருக்கலாம். வரும் காலங்களிலாவது போர்க்கப்பலை கண்ணுக்கு எட்டா தூரத்தில் நிறுத்தி பார்வையிட வைப்பதை தவிர்த்து, கப்பலில் உள்ளே அழைத்து சென்று விளக்கம் அளிப்பது பாதுகாப்பு துறையினரின் கடமையாக கருதுகிறோம். மாணவர்களுக்கும் கடற்படையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று ஆர்வமும் ஏற்படும்’ என்றனர்.