ஏவுகணைகளை வழிமறித்து அழிக்கும் அதிநவீன போர்க்கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வந்தது
ஏவுகணைகளை வழிமறித்து தாக்கி அழிக்கும் அதிநவீன போர்க்கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வந்தது. கடற்படை அதிகாரிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேசிய கொடி அசைத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னை,
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும், இந்தியாவின் மேற்கு கடற்படை நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் ‘ஐ.என்.எஸ். சென்னை’ என்ற அதிநவீன போர்க்கப்பல் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த போர்க்கப்பல் முதன் முறையாக மும்பையில் இருந்து கடந்த 10–ந்தேதி புறப்பட்டு நேற்று காலை 10 மணிக்கு சென்னை துறைமுகத்துக்கு வந்தது. துறைமுக நுழைவு வாயிலில், துறைமுகத்துக்கு வரும் கப்பல்களை வழிநடத்தும் கப்பல்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து பாரம்பரிய மரியாதை (ராயல் சாலியூட்) அளிக்கப்பட்டது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள்
இந்த கப்பலில் வந்த கேப்டன் பிரவீன் நாயர் மற்றும் அதிகாரிகள் மற்றும் கடற்படை வீரர்கள் அனைவரையும், தமிழ்நாடு, புதுச்சேரி பிராந்திய கடப்படை தளபதி அலோக் பட்நாகர் உள்ளிட்ட தென்பிராந்திய கடற்படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பேண்டு வாத்தியங்கள் முழங்க வரவேற்றனர். இவர்களுடன் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் தேசிய மாணவர் படை,
நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள் மற்றும் இந்திய மரபு சார் நடவடிக்கை சங்க நிர்வாகிகள் தேசிய கொடிகளுடன் நின்று வரவேற்றனர்.
பின்னர் அனைவரையும் கப்பல் கேப்டன் பிரவீன் நாயர் கப்பலுக்குள் அழைத்துச் சென்றார். கப்பலில் இடம் பெற்றுள்ள அதிநவீன போர்க்கருவிகள் மற்றும் பல்வேறு வசதிகள் குறித்து விளக்கி கூறினார்.
பின்னர் அலோக்பட்நாகர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
போர்க்கப்பல்களுக்கு நாட்டில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய நதிகள் உள்ளிட்டவற்றின் பெயர்களை வைப்பது வழக்கம். குறிப்பாக ஐ.என்.எஸ். மும்பை, ஐ.என்.எஸ். மைசூர், ஐ.என்.எஸ். கொச்சி, ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம், ஐ.என்.எஸ். கொல்கத்தா, ஐ.என்.எஸ். டெல்லி உள்ளிட்ட புகழ்மிக்க நகரங்கள் பெயர்களும் ஐ.என்.எஸ். கோதாவரி, ஐ.என்.எஸ். பிரம்மபுத்திரா உள்ளிட்ட நதிகளின் பெயர்களும் போர்க்கப்பல்களுக்கு சூட்டப்பட்டு வருகிறது.
இந்த பெயர்களை ஜனாதிபதி சூட்டி வருகிறார்.
முதல்–அமைச்சர்
‘ஐ.என்.எஸ். சென்னை’ பெயரை தாங்கியுள்ள இந்த போர்க்கப்பல், வரலாற்று சிறப்பு மிக்க மாநகரமான சென்னை துறைமுகத்துக்கு வந்திருப்பதை பெருமையாக கருதுகிறோம். இந்த கப்பலை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் உயர் அதிகாரிகள் வரும் 17–ந் தேதி பார்வையிடுகின்றனர். இதனை தொடர்ந்து 18–ந்தேதி நடுக்கடலில் நடக்கும் போர்
ஒத்திகை பயிற்சிக்கு எம்.எல். ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் முக்கிய விருந்தினர்களை அழைத்துச் செல்ல உள்ளோம்.
பாகிஸ்தான் நாட்டில்
மரணதண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை அதிகாரிக்கு ஆதரவாக நாடே உள்ளது. கடற்படை அதிகாரிகளும், வீரர்களும் அதற்கு துணை நிற்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கேப்டன் பிரவீன் நாயர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
163 மீட்டர் நீளம்
மும்பையில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் 95 சதவீதம் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் நவீன வசதிகளுடன் இந்த போர்க்கப்பல் கட்டப்பட்டு உள்ளது. இந்த கப்பல் கடல் சோதனை, எந்திர சோதனை உள்ளிட்டவற்றை முடித்துவிட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய கடற்படையின் மேற்கு கடற்படை பிரிவில் சேர்க்கப்பட்டது. 163 மீட்டர் நீளமும், 17.4 மீட்டர் அகலமும், 7 ஆயிரத்து 500 டன் எடையும் கொண்டது.
மிகவும் சக்தி வாய்ந்த இந்த போர்க்கப்பல் மணிக்கு 56 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. 4 சக்தி வாய்ந்த எரிவாயு விசைக்கருவிகள் மூலம் இயக்கப்படுகிறது. 2 ஹெலிகாப்டர்கள் நிறுத்தும் வசதியுடன், 32 ஏவுகணைகள் வைக்கும் வசதியும் உள்ளது.
ஏவுகணைகளை வழிமறித்து அழிக்கும்
ஏவுகணைகளை வழிமறித்து தாக்கி அழிக்கும் சக்தி கொண்டது. அத்துடன் கப்பலின் மேல்தளத்தில் அதிநவீன கண்காணிப்பு ரேடார் கருவிகள், ஏவுகணைகள் மற்றும் அதிநவீன ஆயுதங்கள் உள்ளன. எதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை கண்ணிவெடி ஏவுகணைகள் மூலமும், வான்வெளியில் எதிரிகளின் விமானங்களை ஏவுகணைகள் மூலமும் தாக்கும் திறன் கொண்டது. அணு ஆயுதங்களை எதிர்த்து போரிடும் திறனும் இந்த கப்பலில் உள்ளது. போர் மேலாண்மை, ஏவுகணை செலுத்துவது, தானியங்கி மின்மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் திறமை வாய்ந்த 40 அதிகாரிகள் மற்றும் 340 கடற்படை வீரர்கள் பணியில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மஞ்சம்பட்டி காளை
‘ஐ.என்.எஸ். சென்னை’ போர்க்கப்பலின் மேல்தளத்தில், தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற ‘மஞ்சம்பட்டி காளை’ உருவத்தை கப்பலின் சின்னமாக (‘லோகோ’) பொறித்து உள்ளனர்.
இதுகுறித்து கப்பலில் பணியாற்றும் தமிழக அதிகாரிகள் கூறும் போது, ‘மஞ்சம்பட்டி காளைகள் எவ்வாறு அதிக திறன் கொண்டதோ அதேபோல் தான் இந்த கப்பலும், அதிக திறன் கொண்டது’ என்றனர்.