ராயபுரம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு

தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தலைநகர் சென்னையிலும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை நிலவுகிறது.

Update: 2017-04-15 21:45 GMT
சென்னை,

வடகிழக்கு பருவமழை கைவிரிப்பு, வெப்ப தாக்கம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் தமிழகம் வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளது. குளங்கள், ஏரிகள், அணைகள் உள்பட அனைத்து நீர்நிலைகளும் வேகமாக வறண்டு வருகின்றன. நீலத்தடி நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது.

இதனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தலைநகர் சென்னையிலும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை நிலவுகிறது. அதன்படி சென்னை ராயபுரம் பகுதியில் 3 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.

இதனால் தண்ணீர் லாரி வரும்போது அப்பகுதி பெண்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக குடங்களுடன் தண்ணீர் பிடிக்க வருவதால் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. மேலும் ஒரு குடும்பத்துக்கு 3 குடங்கள் தண்ணீர் மட்டும் கிடைப்பதாகவும், இதனை வைத்து தண்ணீர் தேவையை சமாளிக்க முடியவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குமுறுகின்றனர்.

‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் ‘கத்திரி வெயில்’ காலம் தொடங்கும் முன்பாகவே சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால், இனி வரும் நாட்களை எப்படி சமாளிக்க போகிறோம்? என்று சென்னை நகர மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்