உடுமலை அருகே, சின்னாற்றின் குறுக்கே கேரள அரசு கட்டியுள்ள தடுப்பணையை அகற்ற வேண்டும்: மலைவாழ் மக்கள் கோரிக்கை

உடுமலை அருகே சின்னாற்றின் குறுக்கே கேரள அரசு கட்டிள்ள தடுப்பணையை அகற்றவேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2017-04-15 23:00 GMT
தளி,

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளது. இந்த வனச்சரகங்களில் தளிஞ்சி, கோடந்தூர், ஈசல்தட்டு, மாவடப்பு, குழிப்பட்டி, குருமலை, பொறுப்பாறு, ஆட்டுமலை, கரட்டுபதி, கருமுட்டி, திருமூர்த்திமலை உள்பட 18 செண்ட்டில்மெண்ட் பகுதிகளில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றார்கள்.

இவர்கள் மேற்குதொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகும் சின்னாறு, பாம்பாறு, தேனாறு ஆகிய ஆறுகளை நீர் ஆதாரமாக கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கேரள அரசு சின்னாற்றின் குறுக்கே தடுப்பணையை கட்டி தாயன்னங்குடி பகுதிக்கு தண்ணீர் கொண்டு சென்றது தற்போது தெரிய வந்துள்ளது.

அகற்ற கோரிக்கை

இதுகுறித்து கோடந்்தூர் மலைவாழ் மக்கள் கூறியதாவது:-

கோடந்தூர்் பொறுப்பாறு மற்றும் அமராவதி அணைக்கு சின்னாறு பிரதான குடிநீர் ஆதாரமாக உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஆற்றின் குறுக்காக தாயன்னங்குடி பகுதியில் கேரள அரசு தடுப்பணையை கட்டியுள்ளது. இதன் காரணமாக சின்னாற்றில் வருகின்ற தண்ணீர்் கால்வாய் மூலமாக கேரள மாநிலத்திற்கே திரும்பவும் எடுத்து செல்லப்படுகிறது. அதனை அடிப்படையாக வைத்து அங்குள்ள விவசாயிகள் ஆண்டு முழுவதும் விவசாயம் செய்து வருகின்றனர்.

மேலும் சின்னாற்றில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளதால் வறட்சி காலங்களில் தண்ணீர் முழுவதுமாக வற்றி விடுகிறது. இதனால் கோடந்தூர்் மற்்றும் பொறுப்பாறு பகுதிகளில் விவசாயத்தொழில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆதலால் சின்னாற்றின் குறுக்காக கேரள அரசு விதிமுறைகளை மீறி கட்டியுள்ள தடுப்பணையை அகற்றுவதற்கு தமிழக அரசு முன் வரவேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்