திருவெண்ணெய்நல்லூர் அருகே முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு கள்ளக்காதலில் பிறந்ததா? போலீசார் விசாரணை

திருவெண்ணெய்நல்லூர் அருகே முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்கப்பட்டது.

Update: 2017-04-15 23:00 GMT

அரசூர்

திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுவானூர் கிராமத்தில் உள்ள முட்புதரில் இருந்து நேற்று முன்தினம் இரவு குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது. இந்த சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற பொதுமக்கள் முட்புதரின் அருகில் பார்த்தபோது அங்கு, பிறந்து சில மணி நேரமே ஆனநிலையில், தொப்புள் கொடியுடன் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று இருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், இதுபற்றி உடனடியாக திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது, சப்–இன்ஸ்பெக்டர் ஜெய்ஹிந்த்தேவி மற்றும் போலீசார் விரைந்து சென்று அந்த குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவமனை டாக்டர்கள், அந்த குழந்தைக்கு உரிய சிகிச்சை அளித்து பராமரித்து வருகின்றனர்.

போலீசார் விசாரணை

மேலும் இந்த பச்சிளம் குழந்தையை முட்புதரில் வீசிச்சென்ற தாய் யார்? என்றும், கள்ளக்காதலில் பிறந்ததால் குழந்தையை வீசிச்சென்றனரா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்