ஊட்டி நகரில் போலீசார் குப்பைகளை அகற்றினர்

ஊட்டியில் தற்போது கோடை சீசன் தொடங்கி உள்ளது. இதன்காரணமாக நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகின்றனர்.

Update: 2017-04-15 22:15 GMT

ஊட்டி

ஊட்டியில் தற்போது கோடை சீசன் தொடங்கி உள்ளது. இதன்காரணமாக நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகின்றனர். அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருவதால் ஊட்டியில் குப்பைகளும் அதிகமாக குவிகிறது. எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இடையே ஊட்டி நகரை தூய்மையாக வைத்து கொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போலீசார் களமிறங்கினர். நேற்று ஒரு நாள் குப்பைகளை அகற்றினர்.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அருகில் இந்த குப்பையை அகற்றும் பணியினை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தொடங்கி வைத்தார். இதில் போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன், இன்ஸ்பெக்டர்கள் விநாயகம், சிவக்குமார் உள்ளிட்ட ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.

போலீசார் தாவரவியல் பூங்கா சாலை, இருதய ஆண்டவர் ஆலய சாலை, மதுவான சந்திப்பு சாலை உள்ளிட்ட இடங்களில் கிடந்த குப்பைகளை அகற்றினர். இவர்களுக்கு நகராட்சி பணியாளர்கள் உதவி செய்தனர். போலீசார் களத்தில் இறங்கி குப்பைகள் அகற்றிய பணியை இந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்