செஞ்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதல்; போலீஸ்காரர் பலி

செஞ்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய விபத்தில் போலீஸ்காரர் பலியானார்.

Update: 2017-04-15 23:00 GMT

செஞ்சி,

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த தாழையூத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன் மகன் ஒளிவாணன்(வயது 32). சென்னையில் போலீஸ்காரராக இருந்து வந்த இவர், தற்போது சென்னை ஜகோர்ட்டு தலைமை நீதிபதியிடம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் சொந்த ஊருக்கு வந்த ஒளிவண்ணன், நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் திண்டிவனத்தில் இருந்து செஞ்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஊரணித்தாங்கல் என்கிற இடத்தில் இவர் வந்த போது, எதிரே வந்த ஆட்டோ ஒளிவாணன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஒளிவாணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீஸ் விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்த செஞ்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான ஒளிவாணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்