எடப்பாடியில் சிகிச்சைக்கு வந்த பெண் சாவு: தனியார் ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகை

எடப்பாடியில் உள்ள சேலம் மெயின் ரோட்டில் இருக்கும் நைனாம்பட்டியில் தனியார் ஆஸ்பத்திரி உள்ளது.

Update: 2017-04-15 23:00 GMT

எடப்பாடி,

எடப்பாடியில் உள்ள சேலம் மெயின் ரோட்டில் இருக்கும் நைனாம்பட்டியில் தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் ஒட்டுக்குடல், குடல் இறக்க நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. மேட்டூரை சேர்ந்த சண்முகம் என்பவரின் மனைவி சுப்புலட்சுமி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குடல் இறக்க நோய்க்காக இந்த ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இந்த நிலையில் நேற்று அவர் மீண்டும் குடல் இறக்க நோய் சிகிச்சைக்காக இதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. திடீரென அவரது உடல்நிலை மோசமானதாக கூறி மேல்சிகிச்சைக்காக சேலம் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே சுப்புலட்சுமி உயிரிழந்தார். இதுபற்றி அறிந்த அவரது உறவினர்கள் தவறான சிகிச்சையால் சுப்புலட்சுமி இறந்ததாக கூறி அந்த தனியார் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் எடப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்