சாத்தூர் அருகே மூடப்பட்ட டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் மீண்டும் போராட்டம்

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவினை தொடர்ந்து சாத்தூர் பகுதியில்

Update: 2017-04-15 22:30 GMT

சாத்தூர்,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவினை தொடர்ந்து சாத்தூர் பகுதியில் மூடப்பட்ட ஒரு டாஸ்மாக் கடைக்கு பதிலாக சாத்தூர் அருகே உப்பத்தூரில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதைக் கண்டித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கடந்த 10–ந் தேதி மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் அந்த கடை மூடப்பட்டது. இந்த நிலையில் நேற்று அந்த கடை மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அந்தப்பகுதிக்கு திரண்டு வந்து டாஸ்மாக் கடையினை உடனடியாக மூடவேண்டும் என்று வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் தாசில்தார் முத்துலட்சுமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. அந்த இடத்தில் டாஸ்மாக் கடை தொடர்ந்து இயங்கியது.

மேலும் செய்திகள்