பெத்தனசாமி, சின்னச்சாமி கோவில் திருவிழா பேரையூர் அருகே உள்ள மங்கல்ரேவுவில் ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள மங்கல்ரேவுவில் உள்ள பெத்தனசாமி

Update: 2017-04-15 22:45 GMT

உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள மங்கல்ரேவுவில் உள்ள பெத்தனசாமி, சின்னச்சாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு விழாவை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் வீரராகவராவ், உசிலம்பட்டி வருவாய்கோட்டாட்சியர் சுகன்யா, உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி, போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ராமகிருஷ்ணன், முருகன் ஆகியோர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த ஜல்லிக்கட்டில் 288 காளைகள் பங்கேற்றன. 316 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் 19 பேர் காயமடைந்தனர். சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்ட திருப்பரங்குன்றம் முருகன் என்பவருக்கு முதல் பரிசாக மோட்டார்சைக்கிளும், 2–வது பரிசு அவனியாபுரம் பாண்டியராஜன், 3–வது பரிசு மாடக்குளம் பரசிவம் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்