பள்ளி மாணவனை கடத்தி செல்போன்–பணம் பறிப்பு கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் கைது
மதுரை பீ.பி.குளம் காமராஜர் 2–வது தெருவைச் சேர்ந்தவர் மீரா முகைதீன் (வயது 45).
மதுரை,
மதுரை பீ.பி.குளம் காமராஜர் 2–வது தெருவைச் சேர்ந்தவர் மீரா முகைதீன் (வயது 45). இவரது மகன் அப்துல் ரகுமான். 9–ம் வகுப்பு படித்து வருகிறான். சம்பவத்தன்று இரவு அப்துல் ரகுமான் இருசக்கர வாகனத்தில் அண்ணாநகரில் உள்ள நண்பரை பார்க்கச் சென்றான். அவரைப் பார்த்து விட்டு பின்னர் அண்ணாநகர் மெயின் ரோடு வழியாக வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது அப்துல் ரகுமானை 7 பேர் கும்பல் வழிமறித்து வண்டியூர் கண்மாய்க்கு கடத்திச் சென்றது. அங்கு அப்துல் ரகுமானை மிரட்டி அவனது செல்போன் மற்றும் 150 ரூபாய் பணத்தை பறித்து கொண்டு தப்பி விட்டது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் செல்போனை பறித்துச் சென்றது தாசில்தார்நகரை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் முகமது அஷ்ரப்(18), ரூபன்ரெட்டி(18), பாலிடெக்னிக் மாணவர் வசந்தகுமார்(18), சாதிக், ரியாஸ் உள்பட 7 பேர் என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் முகமது அஷ்ரப், ரூபன்ரெட்டி, வசந்தகுமார் மற்றும் ஒருவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.