ஆய்வக உதவியாளர் பணிக்கு பணிநியமன கலந்தாய்வு
நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–;
நெல்லை,
நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு கடந்த 9–ந் தேதி சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. இதில் 557 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 106 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டு உள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆய்வக உதவியாளர் பணிக்கு தேர்வானவர்கள் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு பாளையங்கோட்டை சாராள்தக்கர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற இருக்கும் பணி நியமன கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பாணைகளின் நகல், கல்வித்தகுதி சான்றிதழ் அசல் ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.