சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோட்டியில் வசிக்கும் 27,534 பேருக்கு, ஆதார்எண் இல்லை என்றால் ஓய்வூதியம் நிறுத்தப்படும் வருங்கால வைப்புநிதி உதவி கமிஷனர் தகவல்
சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோட்டில் வசிக்கும் 27,537 பேருக்கு, ஆதார் எண் பதிவு செய்யவில்லை
சேலம்,
சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோட்டில் வசிக்கும் 27,537 பேருக்கு, ஆதார் எண் பதிவு செய்யவில்லை என்றால் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சேலம் உதவி மண்டல வருங்கால வைப்புநிதி உதவி கமிஷனர்(பென்சன்) நாம்ராடா பட்டேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
கடைசி வாய்ப்புமத்திய அரசின் புதிய தொழில் நுட்பத்திற்கு ஏற்ப இ.பி.எப். பென்சன் பெறும் ஓய்வூதியதார்கள் தங்களின் ஆதார் எண் இணைப்புடன் கூடிய வாழ்நாள் சான்றிதழ்(உயிருடன் இருப்பதும்/மறுமணம் செய்யாத ஓய்வூதியதாரர்கள்) உடனடியாக வருகிற 30–ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இது அவர்களுக்கு கடைசி வாய்ப்பாகும்.
குறிப்பிட்ட தேதிக்குள் ஓய்வூதியதாரர்கள், தாங்கள் பென்சன் பெறும் வங்கி மூலமாகவோ அல்லது இ–சேவை மையம் மூலமாகவோ அல்லது இ.பி.எப்.ஓ. சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி அலுவலகம் மூலமாகவோ அல்லது பொதுசேவை மையம் மூலமாகவோ ஆதார் எண்ணுடன் கூடிய உயிர்வாழ்நாள் சான்றிதழை தங்கள் கை விரல் ரேகை பதிவு அல்லது கருவிழி பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த புதிய வசதியைபெற பென்சன் ஆணை எண், வங்கி கணக்கு எண், ஆதார் நகல், செல்போன் எண் ஆகியவற்றை தவறாமல் கொண்டு செல்ல வேண்டும்.
ஓய்வூதியம் நிறுத்தப்படும்ஏற்கனவே காகித வடிவில் சமர்ப்பித்த ஓய்வூதியதாரர்கள், தொடர்ந்து பென்சன்பெற ‘ஆதார் எண்‘ சார்ந்த மின்னணு உயிர்வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஜீவன் பிரமாண(டிஜிட்டல் லைப் சர்டிபிகேட்) சான்றிதழில் ‘ஆதார்எண்‘ பதிவு செய்யாத 27,534 ஓய்வூதியதாரர்களுக்கு மே மாதம் முதல் பென்சன் நிறுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.