கிருஷ்ணகிரியில், விவசாயிகளை தாக்கிய 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேர் கைது

கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் மாதன்(வயது 52)

Update: 2017-04-15 22:30 GMT

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் மாதன்(வயது 52), திம்மராயன், கோவிந்தசாமி. விவசாயிகள். இவர்கள் நேற்று முன்தினம் மாலை கிருஷ்ணகிரி சார்பதிவாளர் அலுவலகம் அருகே உள்ள ஜூஸ் கடையில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த செட்டியம்பட்டி பகுதியை சேர்ந்த பாவேந்தன்(21), திருப்பதி(23), திலிப்(20), கலைவேந்தன்(21) மற்றும் 2 கல்லூரி மாணவர்கள் ஆகியோருக்கும் மாதன் தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாவேந்தன் தரப்பினர், மாதன் மற்றும் அவருடன் இருந்தவர்களை சரமாரியாக தாக்கினார்கள்.

இதில் படுகாயமடைந்த மாதன் தரப்பினரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து மாதன் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்