கண்காணிப்பு கேமரா அமைப்பது தொடர்பாக வியாபாரிகளுடன் போலீசார் ஆலோசனை கூட்டம்
வேலூர் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் போலீஸ்;
குடியாத்தம்,
வேலூர் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் போலீஸ் சரகத்திலும் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வழிப்பறி, திருட்டு, கொள்ளை ஆகியவற்றில் ஈடுபடுபவர்களை கண்டறியவும், குற்றங்களைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக குடியாத்தம் நகரில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களை அமைப்பது தொடர்பாக போலீசார் சார்பாக, அனைத்து வியாபாரிகள் சங்கங்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடந்தது. டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ் தலைமை தாங்கினார். வியாபாரிகள் சங்கங்களைச் சேர்ந்த அன்வர்அலிகான், என்.இ.கிருஷ்ணன், நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு கலந்து கொண்டு கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டியதின் அவசியம் குறித்துப் பேசினார். கூட்டத்தில் பல்வேறு வியாபாரிகள் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.