ஆம்பூர் தாலுகாவில் 5,900 பயனாளிகளுக்கு ‘ஸ்மார்ட்’ ரே‌ஷன் கார்டுகள் ஆர்.பாலசுப்பிரமணி எம்.எல்.ஏ. வழங்கினார்

ஆம்பூர் தாலுகாவில் முதல் கட்டமாக 5,900 ‘ஸ்மார்ட்’ ரே‌ஷன் கார்டு வந்துள்ளன.;

Update: 2017-04-15 23:00 GMT

ஆம்பூர்,

ஆம்பூர் தாலுகாவில் முதல் கட்டமாக 5,900 ‘ஸ்மார்ட்’ ரே‌ஷன் கார்டு வந்துள்ளன. அதனை பயனாளிகளுக்கு வழங்கும் விழா கன்னிகாபுரத்தில் உள்ள ரே‌ஷன் கடையில் நடந்தது.

விழாவுக்கு வட்ட வழங்கல் அலுவலர் சுமதி தலைமை தாங்கினார். விழாவில் ஆர்.பாலசுப்பிரமணி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு ‘ஸ்மார்ட்’ ரே‌ஷன் கார்டை வழங்கினார். இதில் மண்டல மேலாளர் சந்திரசேகரன், மாதனூர் கூட்டுறவு சார்பதிவாளர் ராமமூர்த்தி, வருவாய் அலுவலர்கள் திருஞானம், திருமால், முன்னாள் நகரசபை உறுப்பினர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்