காவிரி பிரச்சினை: நடிகர் சத்யராஜுக்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு “பாகுபலி-2 படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம்”
‘பாகுபலி-2’ படத்தில் சத்யராஜ் நடித்துள்ளதால் கர்நாடகாவில் படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
பெங்களூரு,
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், சத்யராஜ், நாசர், அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடித்துள்ள ‘பாகுபலி-2’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி விரைவில் திரைக்கு வர உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியதால் இரண்டாம் பாகத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் ‘பாகுபலி-2’ படத்தில் சத்யராஜ் நடித்துள்ளதால் கர்நாடகாவில் படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு தண்ணீரை திறந்து விட மறுத்ததற்காக கன்னடர்களை அவமானப்படுத்தும் வகையில் சத்யராஜ் பேசி உள்ளார். எனவே அவர் மன்னிப்பு கேட்டால்தான் பாகுபலி-2 படத்தை திரையிட அனுமதிப்போம் என்று அந்த அமைப்புகள் அறிவித்து உள்ளன. இதனால் கர்நாடகாவில் பாகுபலி-2 படம் திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இது பாகுபலி-2 படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.