தொரேகாடஹள்ளி கிராமத்தில் பயங்கரம் வாலிபரை கொன்று உடல் ஆற்றில் வீச்சு யார் அவர்? போலீஸ் விசாரணை
தொரேகாடஹள்ளி கிராமத்தில் வாலிபரை அடித்துக் கொன்று உடலை சிம்ஷா ஆற்றில் வீசிச்சென்ற பயங்கர சம்பவம் நடந்துள்ளது. அவர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஹலகூர்,
மண்டியா மாவட்டம் ஹலகூர் அருகே உள்ள தொரே காடஹள்ளி கிராமத்தில் ஓடும் சிம்ஷா ஆற்றில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் இறந்து கிடப்பதாக ஹலகூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி சோதனை செய்தனர்.
அப்போது அந்த வாலிபர் பலத்த ரத்தக்காயங்களுடன் கிடந்தார். யாரோ மர்ம நபர்கள் அவரை அடித்துக் கொலை செய்து, உடலை சிம்ஷா ஆற்றில் வீசியிருப்பது தெரியவந்தது. ஆனால் அந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் போன்ற விவரங்கள் தெரியவில்லை.
யார் அவர்?
இதையடுத்து போலீசார் அந்த வாலிபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மண்டியா மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட வாலிபர் யார் என்று தெரிந்தால்தான்? கொலையாளிகளையும், கொலைக்கான காரணத்தையும் கண்டறிய முடியும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து ஹலகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.