சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
பா.ஜனதா முன்னாள் எம்.பி. தருண்விஜயை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ராயபுரம்
தென்னாட்டு மக்களை கருப்பர்கள் என கூறிய பா.ஜனதா முன்னாள் எம்.பி. தருண்விஜயை கண்டித்து, திராவிடர் கழகம் சார்பில் நேற்று காலை சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் அன்புராஜ் முன்னிலை வகித்தார். சென்னை மண்டல செயலாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார். இதில் வடசென்னை மாவட்ட தலைவர் குமாரதேவன் உள்பட 100–க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் அமைப்பு செயலாளர் ஞானசேகரன் நன்றி கூறினார்.