புதுச்சேரியில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது: திருக்கை மீன்கள் ஏராளமாக சிக்கின

புதுச்சேரியில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கிய நிலையில் நேற்று மீனவர்களின் வலையில் திருக்கை மற்றும் கணவாய் மீன்கள் அதிக அளவில் சிக்கின.

Update: 2017-04-14 22:45 GMT

புதுச்சேரி

புதுச்சேரியில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கிய நிலையில் நேற்று மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் வலையில் திருக்கை மற்றும் கணவாய் மீன்கள் அதிக அளவில் சிக்கின.

மீன்பிடி தடைக்காலம்

மீன்களுக்கான இனப்பெருக்கத்துக்காக ஏப்ரல், மே மாதங்களில் மீனவர்கள் விசைப்படகுகளில் சென்று கடலில் மீன்பிடிப்பதற்காக தடை விதிக்கப்படுவது வழக்கம். இந்த மீன்பிடி தடைக்காலம் 47 நாட்கள் அமலில் இருக்கும். இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் புதுவையில் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியது.

இந்தநிலையில் நேற்று மாலையே பெரும்பாலான மீனவர்கள் கடலுக்குச் செல்வதை நிறுத்தவிட்டனர். காலையில் மீன்பிடிக்க சென்ற பலர் நேற்று மாலை கரை திரும்பினார்கள்.

திருக்கை மீன்கள்

இவர்களது வலையில் எப்போதும் இல்லாத அளவுக்கு கணவாய் மீன்கள் அதிக அளவில் கிடைத்து இருந்தன. பெரும்பாலான மீனவர்களின் வலையில் திருக்கை மீன்களும் கிடைத்தன. குறிப்பாக கஜேந்திரன் என்ற மீனவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற மீனவர்களுக்கு சுமார் 2 டன் (43 மீன்கள்) திருக்கை மீன்கள் கிடைத்தன.

மீன்பிடி தடைக்காலம் தொடங்கிய நிலையில் மீனவர்கள் தங்களது படகுகளில் வைத்திருந்த வலைகளை எடுத்து வந்து பழுது பார்க்கும் பணிகளை தொடங்கியுள்ளனர். படகுகளையும் விரைவில் அவர்கள் சீரமைக்க உள்ளனர்.

மேலும் செய்திகள்