நலத்திட்ட உதவிகள்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தமிழ்ப்புத்தாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Update: 2017-04-14 22:30 GMT

மதுராந்தகம்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தமிழ்ப்புத்தாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கலச விளக்கு வேள்வி பூஜை, கலைநிகழ்ச்சிகள் நடந்தன. கலச விளக்கு வேள்வி பூஜையை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார். கலைநிகழ்ச்சிகளுக்கு காளிதாஸ் முன்னிலை வகித்தார். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. அன்னதானத்தை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர் கோ.ப.செந்தில்குமார் தொடங்கி வைத்தார். தமிழ்ப் புத்தாண்டையொட்டி சித்தர் பீடம் வருகை தந்த பங்காரு அடிகளாருக்கு காஞ்சீபுரம் மாவட்ட பக்தர்கள் பாதபூஜை செய்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். ரூ.15 லட்சம் மதிப்பலான நலத்திட்ட உதவிகளை 446 பயனாளிகள் பயன் பெறும் வகையில் பங்காரு அடிகளார் வழங்கினார். 15 ஜோடிகளுக்கு இலவச திருமணமும், 6 தம்பதிகளுக்கு மணிவிழாக்களையும் பங்காரு அடிகளார் நடத்தி வைத்தார்.

விழாவில் காஞ்சீபுரம் மாவட்ட கூடுதல் நீதிபதி கருணாநிதி, ரெயில்வே உயரதிகாரி செந்தமிழ்செல்வன், வெங்கடசாமி, சாய்பிரசாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் மற்றும் காஞ்சீபுரம் மாவட்ட தலைவர் கொண்டாரெட்டியார் தலைமையிலான காஞ்சீபுரம் மாவட்ட ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள் சிறப்பாக செய்திருந்தன.

மேலும் செய்திகள்