ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரைதிரும்பினர்
ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்து வந்த குளச்சல் மீனவர்கள் கரை திரும்பினர்.
குளச்சல்
குளச்சலில் 300–க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இந்த விசைப்படகுகளில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் ஆழ்கடலில் சுமார் 12 நாட்கள் வரை தங்கி இருந்து மீன் பிடித்துவிட்டு கரை திரும்புவது வழக்கம்.
மேலும் சில விசைப்படகு மீனவர்கள் கேரளாவுக்கு சென்றும் மீன்பிடிப்பது வழக்கம். நாளை(ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை கொண்டாட குளச்சல் மீனவர்கள் அனைவரும் நேற்று கரை திரும்பினர். 12 நாட்கள் கழித்து கரை திரும்பும் மீனவர்கள் கூட 4,5 தினங்களில் கரை திரும்பி விட்டனர். இதனால் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
ஊர் திரும்பினர்அனைவரும் தங்களது விசைப்படகுகளை குளச்சல் மீன்பிடித்துறை முகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தி உள்ளனர்.
மேலும் கேரள பகுதியில் மீன்பிடித்து வந்த குளச்சல் மற்றும் சுற்றுவட்டார மீனவர்களும் நேற்று விசைப்படகுகளுடன் கரை திரும்பினர். பின்னர் அனைவரும் படகை நிறுத்தி விட்டு சொந்த ஊர் திரும்பினர்.
இதனால் குளச்சல் மற்றும் சுற்றுவட்டார மீனவ கிராமங்களில் ஈஸ்டர் கொண்டாட்டம் களை கட்டி உள்ளது.