சேலம் ஸ்வர்ணபுரி ஏ.வி.ஆர். ஸ்வர்ண மகாலில் புதிய எலைட் கேலரி ஷோரூம் நடிகை கீர்த்தி சுரேஷ் திறந்து வைத்தார்
சேலம் ஸ்வர்ணபுரியில் உள்ள ஏ.வி.ஆர். ஸ்வர்ண மகாலில் புதிதாக அமைக்கப்பட்ட எலைட் கேலரி ஷோரூமை நடிகை கீர்த்தி சுரேஷ் திறந்து வைத்தார்.
சேலம்,
சேலம் ஸ்வர்ணபுரியில் உள்ள ஏ.வி.ஆர். ஸ்வர்ண மகால் ஜூவல்லரியில் புதிதாக எலைட் கேலரி ஷோரூம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு ஏ.வி.ஆர். ஸ்வர்ண மகால் சேர்மன் சுதர்சனம் தலைமை தாங்கினார். மேனேஜிங் டைரக்டர் சஞ்சய், இயக்குனர்கள் சுகந்தி சுதர்சனம், சவுமியா சஞ்சய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திரைப்பட நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏ.வி.ஆர். ஸ்வர்ண மகால் எலைட் கேலரி ஷோரூமை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அவர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து புதிய ஷோரூமை பார்வையிட்டார். தொடர்ந்து முதல் விற்பனையை நடிகை கீர்த்தி சுரேஷ் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். மேலும், வாடிக்கையாளர்களுக்கு பரிசுகள் வழங்கியதுடன் அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
நடனம் ஆடிய கீர்த்தி சுரேஷ்இதையடுத்து நடிகை கீர்த்தி சுரேஷ், ஷோரூமில் இருந்து வெளியே வந்தார். பின்னர், அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி அந்த பகுதியில் திரண்டிருந்த ரசிகர்களை பார்த்து கையை அசைத்து அவர்களை உற்சாகப்படுத்தினார். மேலும், சிறிது நேரம் சினிமா பாடலை பாடிய அவர் நடனமும் ஆடினார். அதை பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். பின்னர், அங்கிருந்து நடிகை கீர்த்தி சுரேஷ் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.
புதிய எலைட் கேலரி ஷோரூம் திறப்பு விழா குறித்து ஏ.வி.ஆர். ஸ்வர்ணமகால் மேனேஜிங் டைரக்டர் சஞ்சய் கூறியதாவது:–
செய்கூலி, சேதாரம் இல்லைஎங்களது வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, பட்ஜெட்டிற்கு தகுந்தாற்போல் நவீன மாடல்கள் கொண்ட தங்கம், வைர நகைகள் விற்பனை செய்யப்படுகிறது. எலைட் கேலரியில் பல்வேறு டிசைன்களில் மனம் கவர்ந்த ஏராளமான வைர, தங்க நகைகள் உள்ளன. திறப்பு விழாவையொட்டி வைர நகைகளுக்கு செய்கூலி, சேதாரம் இல்லை. தங்க நகைகள் வரலாறு காணாத வகையில் மிக குறைந்த சேதாரம் வழங்கப்படுகிறது. அதேபோல், 100 சதவீதம் ஹால்மார்க் தர வெள்ளி கொலுசு மற்றும் வெள்ளி பொருட்களுக்கு செய்கூலி, சேதாரம் இல்லை. புதிய வடிவில் புதுமையாக வடிவமைக்கப்பட்ட ஆபரணங்கள் செய்கூலி இல்லாமல் குறைந்த சேதாரத்தில் விற்கப்படுகிறது. இச்சலுகை வருகிற 30–ந் தேதி வரை உள்ளது.
வெள்ளி நாணயம் இலவசம்மேலும், அட்சய திருதியை சிறப்பு சலுகையாக வருகிற 28, 29–ந் தேதி இரண்டு நாட்களும் வாடிக்கையாளர்கள் வாங்கும் தங்க நகைகளின் எடைக்கு எடை வெள்ளி நாணயம் இலவசமாக வழங்கப்படும். முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கும் இந்த சலுகை உண்டு. வாடிக்கையாளர்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.