பா.ஜனதா எம்.பி.யை கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

பா.ஜனதா எம்.பி. தருண் விஜய், தென்தமிழகத்தை சேர்ந்தவர்களை கருப்பர்கள் என கூறியதை கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-04-14 23:00 GMT

திண்டுக்கல்

பா.ஜனதா எம்.பி. தருண் விஜய், தென்தமிழகத்தை சேர்ந்தவர்களை கருப்பர்கள் என கூறியதை கண்டித்து திண்டுக்கல்லில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் நாகல்நகரில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல தலைவர் வீரபாண்டி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது தருண் விஜய் எம்.பி.யை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், திராவிடர் கழக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்