பிறந்த நாளையொட்டி அம்பேத்கர் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி தஞ்சையில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2017-04-14 23:15 GMT

தஞ்சாவூர்,

சட்ட மேதை அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி தஞ்சை–நாஞ்சிக்கோட்டை சாலையில் மறியல் கிராமத்தில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாநகர மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் மாநகர் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் தியாகராஜன், பொருளாளர் பழனியப்பன், நிர்வாகிகள் வேங்கை.கணேசன், லட்சுமிநாராயணன், சாக்கிலோ, ராஜசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் நாஞ்சி.கி.வரதராஜன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் அசோக்ராஜன், மகாலிங்கம், அடைக்கலசாமி, செல்வராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சொக்கா.ரவி தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஒன்றிய செயலாளர்கள் வினோத், அரங்ககுரு, நகர செயலாளர் தமிழ்முதல்வன், பாராளுமன்ற தொகுதி செயலாளர் கிள்ளிவளவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் தேசிய பாதுகாப்பு இயக்கம் சார்பில் பொதுச்செயலாளர் வக்கீல் கார்த்திகேயன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இணை பொதுச்செயலாளர் குணசேகரன், கொள்கை பரப்பு செயலாளர் சிவராசு, மாவட்ட செயலாளர் வக்கீல் சந்திரசேகர், மண்டல செயலாளர் வக்கீல் முருகேசன், தலைமை நிலைய செயலாளர் பீமாராவ்ராம்ஜி, மாநில இளைஞரணி செயலாளர் கரிகாலன் உள்பட பலர் பங்கேற்றனர்.

ஏ.ஐ.டி.யூ.சி.

விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் மாநில துணைத் தலைவர் மாசிலாமணி தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர், மாவட்ட தலைவர் உத்திராபதி, செய்தி தொடர்பாளர் பன்னீர்செல்வம், இளந்தமிழ்புலிகள் பாசறை நிர்வாகி தமிழ்செல்வன், நகர செயலாளர் வெற்றி, ஒன்றிய செயலாளர் தமிழன்காமராஜ், ஒன்றிய இளைஞரணி தலைவர் ஸ்டாலின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தஞ்சை மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் அரங்கராஜன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு, நிர்வாகிகள் ராஜேந்திரன், இன்பரசன், ஜெயபால் ஆகியோர் பங்கேற்றனர்.

மக்கள் மறுமலர்ச்சி இயக்கம் சார்பில் நிறுவன தலைவர் மதியழகன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் ஆதி.மாயவன், திருநாவுக்கரசு, பாபு, ரவிக்குமார், ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கும்பகோணம் மண்டல அரசு போக்குவரத்துக்கழக ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் தஞ்சை பழைய பஸ் நிலையம் எதிரில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பொதுச்செயலாளர் துரை.மதிவாணன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார், மாவட்ட தலைவர் சேவையா, பொருளாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த அருண்சோரி, ராஜன், கிருஷ்ணன், கணேசன், விடுதலைவேந்தன், முத்து.மாரியப்பன், அரவிந்தராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

தமிழ்ப்பல்கலைக்கழகம்

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு துணைவேந்தர் பாஸ்கரன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் பதிவாளர் முத்துக்குமார், துணைப் பதிவாளர் பன்னீர்செல்வம் மற்றும் பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்