அந்தியூர் அருகே நகலூரில் புனித வெள்ளியையொட்டி சிலுவை பாதை ஊர்வலம்

நகலூரில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த புனித ஜெபாஸ்தியார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது.;

Update: 2017-04-14 23:00 GMT

அந்தியூர்

அந்தியூர் அருகே நகலூரில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த புனித ஜெபாஸ்தியார் ஆலயம் உள்ளது. புனித வெள்ளியையொட்டி இந்த ஆலயத்தில் நேற்று காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. பின்னர் 7 மணி அளவில் சிலுவை பாதை ஊர்வலம் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு ஆலய பங்கு தந்தை அமல சார்லஸ் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை பாடல்களை பாடியபடி சென்றனர். ஊர்வலம் ஆலயத்தில் இருந்து தொடங்கி நகலூரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை 10 மணி அளவில் வந்தடைந்தது.

இதேபோல் மைக்கேல்பாளையம், ஆப்பக்கூடல், தவுட்டுப்பாளையம், சந்தியபாளையம், புதுப்பாளையம், சங்கரபாளையம், பர்கூர், ஆலாம்பாளையம், அத்தாணி ஆகிய பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

மேலும் செய்திகள்