சோலாரில் நடு ரோட்டில் லாரி கவிழ்ந்தது; டிரைவர் உயிர் தப்பினார்

ஈரோடு சோலாரில் நடுரோட்டில் லாரி கவிழ்ந்தது; டிரைவர் உயிர் தப்பினார்

Update: 2017-04-14 22:45 GMT

ஈரோடு,

நெல்லை மாவட்டம் தென்காசியில் இருந்து மரக்கட்டை பாரம் ஏற்றிக்கொண்டு தர்மபுரி நோக்கி நேற்று லாரி ஒன்று சென்றுகொண்டு இருந்தது. அந்த லாரி ஈரோடு சோலார் பகுதியில் ஒரு வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக நடுரோட்டில் உள்ள தடுப்புச்சுவர் மீது மோதியது. இந்த விபத்தில் அந்த லாரி தலைகீழாக கவிழ்ந்தது. அப்போது டிரைவர் வெளியே குதித்து லேசான காயத்துடன் உயிர் தப்பினார். அதன்பின்னர் கிரேன் மூலம் லாரியை மீட்கும் பணி நடந்தது.

இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்