கூட்டுறவு இணைப்பதிவாளர் பொறுப்பேற்பு
கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் பணியிடம் காலியாக இருந்தது.
கடலூர்,
கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் பணியிடம் காலியாக இருந்தது. இதனால், விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இயக்குனர் ஆர்.கே.சந்திரசேகர் கூடுதலாக இதை கவனித்து வந்தார்.
இந்த நிலையில் வ.சி.கோமதி என்பவர் கடலூர் மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர், மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் நேற்று முன்தினம், பொறுப்பேற்றுக்கொண்டார். புதிதாக பொறுப்பேற்ற வ.சி.கோமதிக்கு கூட்டுறவு அலுவலர்கள் உள்பட அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.