கடலூரில் அம்பேத்கர் சிலைக்கு கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை

அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு கடலூரில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Update: 2017-04-14 23:00 GMT

கடலூர்,

அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க.(புரட்சி தலைவி அம்மா) சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட அவைத்தலைவர் கோ.அய்யப்பன் தலைமையில், மீனவர் அணி செயலாளர் கே.என்.தங்கமணி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர்கள் ஸ்ரீதர், கணேசன் மற்றும் உமாசங்கர் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் கூட்டுறவு சங்க தலைவர்கள் ரவிச்சந்திரன், ஆதிபெருமாள், வர்த்தக நலவாரிய உறுப்பினர் வரதன், முன்னாள் கவுன்சிலர்கள் அய்யாதுரை, செல்லிகிருஷ்ணன், சர்தார், நித்யானந்தம், சம்பத், சேகர், விஜயகுமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சுதாகர், ராமலிங்கம், சுரேஷ், மாரியம்மாள் நாகராஜ், லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பிரகாஷ், மகளிர் அணி அஞ்சுகம், ஒன்றிய மாணவர் அணி விஜயராயலு மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, வார்டு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அ.தி.மு.க.(அம்மா) சார்பில் நகர செயலாளர் குமரன் தலைமையில், மருத்துவர் அணி மாநில துணை செயலாளர் டாக்டர் சீனுவாசராஜா, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் சேவல்குமார், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் நகர துணை செயலாளர் கந்தன், மீனவர் அணி துணை செயலாளர் பஞ்சநாதன், மாவட்ட பிரதிநிதி வெங்கட்ராமன், முன்னாள் கவுன்சிலர்கள் தமிழ்செல்வன், பிருந்தாசங்கர், ரமேஷ், அன்பு, விஜயலட்சுமி அசோகன், ஒன்றிய துணை செயலாளர் ஏழுமலை, நகர எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் என்.கே.ராஜூ, வார்டு துணை செயலாளர் அசோகன், சிங்காரவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கடலூர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.அம்மா தீபா பேரவை சார்பில் மாவட்ட தலைவர் ரங்கா தலைமையில் மண்டல பொறுப்பாளர் வக்கீல் செல்வவிநாயகம் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் மாவட்ட பொறுப்பாளர் ரவிச்சந்திரன், தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் காசிநாதன் மற்றும் திரிசங்கு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தி.மு.க.வினர்

தி.மு.க. சார்பில் நகர செயலாளர் கே.எஸ்.ராஜா தலைமையில் மாநில மாணவர் அணி செயலாளர் இள.புகழேந்தி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் மாவட்ட அவைத்தலைவர் து.தங்கராசு, நகர அவைத்தலைவர் நாராயணன், துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் சலீம், மாவட்ட பிரதிநிதிகள் ரங்கநாதன், ராஜேந்திரன், தொ.மு.ச. பழனிவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பா.ஜ.க. சார்பில் மாவட்ட பொதுச்செயலாளர் குணா என்கிற குணசேகரன் தலைமையில் நகர தலைவர் வெங்கடேசன், பொதுச் செயலாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலையில் அறிவு ஜீவி அமைப்பின் மாவட்ட தலைவர் லட்சுமி நாராயணன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

இதில் ஒன்றிய தலைவர்கள் நித்யானந்தம், வேல்முருகன், செயலாளர்கள் செல்வராஜ், கண்ணன் வர்த்தக அணி மணி இந்திரஜித், தொழில் அணி அய்யப்பன், நகர துணை தலைவர் நடராஜன், இளைஞர் அணி பிரபு, வர்த்தக அணி அருள்ஜோதி, மாவட்ட பொதுச் செயலாளர் செல்வகுமார், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமலிங்கம், மகளிர் அணி மாவட்ட செயலாளர் சிவகாமி, செயற்குழு உறுப்பினர்கள் பொன்னிரவி, புகழேந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

காங்கிரஸ்

ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் ராமலிங்கம் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் மாநில அமைப்பு செயலாளர் வந்தியதேவன், நகர செயலாளர் ராமசாமி, மாவட்ட துணை செயலாளர் கடல்செல்வம், மறுமலர்ச்சி தொழிற்சங்கம் மணிமாறன், மாணவர் அணி ஆதித்யன் மற்றும் நிர்வாகிகள் சிவகுரு, தயாளன், பத்மநாபன், தங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் நகர தலைவர் குமார் தலைமையில் மாநில சிறப்பு அழைப்பாளர் வக்கீல் சந்திரசேகர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன், ரவிக்குமார், சாந்திராஜ், முருகன், பார்த்தீபன், மார்க்கெட் மணி, நகர துணை தலைவர் மாரிமுத்து, முன்னாள் இளைஞர் அணி தலைவர் கலைச்செல்வன், செயற்குழு உறுப்பினர் செல்வகுமார், மாவட்ட தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ராம்ராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஆதிராமகிருஷ்ணன், துணை தலைவர் மங்கலட்சுமி, மாணவர் காங்கிரஸ் குமார், மாவட்ட தலைவர் சதாசிவம் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு சிகிச்சை பிரிவில் உள்ள பெண்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

விடுதலை சிறுத்தைகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகர செயலாளர்கள் செந்தில், ராஜதுரை, மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், மாவட்ட துணை செயலாளர் இல.திருமேனி, அஸ்கர் அலி, தொகுதி செயலாளர் நூருல் அமீன், இஸ்லாமிய ஜனநாயக பேரவை முகைதீன், முகாம் ஒருங்கிணைப்பாளர் கலியமூர்த்தி, அறிவுக்கரசு ஆகியோர் கலந்துகொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நகர செயலாளர் சேதுராமன், துணை செயலாளர்கள் சீனிவாசன், தேவர், பூபாலன், ராமகிருஷ்ணன், அரசு ஊழியர் ஐக்கிய பேரவை பாவாணன் மற்றும் நிர்வாகிகள் சொக்கு, புதியவன், ஸ்ரீதர், பிரதீப், சக்திவேல், கிட்டு, செல்வம், சுரேஷ்பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக புதுகுப்பம் எஸ்.ஆர்.காலனியில் நகர செயலாளர் தேவர் தலைமையில் கொடியேற்றி அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் தொண்டர் அணி மாநில துணை செயலாளர் பாவாணன் மற்றும் முகாம் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

நாம்தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் தலைமையில் மாவட்ட தலைவர் சாமிரவி, ஒன்றிய செயலாளர் பிரபு, இளைஞர் பாசறை செயலாளர் திரு மற்றும் நிர்வாகிகள் ராஜா, வே.சா.ராஜா, சுரேந்தர், பிரவீன், நாராயணன், பாலாஜி, சங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சமத்துவ மக்கள் கழகம் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் முத்துக்குமரன் தலைமையில் மேற்கு மாவட்டசெயலாளர் ராஜவேல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் நகர தலைவர் ரவி, செயலாளர் கண்ணன், பொருளாளர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு

அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையிலும், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் டாக்டர் ஸ்டாலின் தலைமையிலும், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் சேகர் தலைமையிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நகர செயலாளர் அரிகிருஷ்ணன் தலைமையிலும், தமிழ்நாடு எஸ்.சி.எஸ்.டி. அலுவலர் நலச்சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் பரமேஸ்வரன் தலைமையிலும், இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட பொருளாளர் உத்திரவேல் தலைமையிலும், அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் செங்கல்ராவ் தலைமையிலும், அரசு ஊழியர் ஐக்கிய பேரவை சார்பில் மாவட்ட தலைவர் ராகவன் தலைமையிலும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் செந்தில்முருகன் தலைமையிலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

மேலும் அரசு ஊழியர் சங்கம் மற்றும் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்கடியினர் நலத்துறை அடிப்படை பணியாளர் சங்கம், ஆட்டோ டிரைவர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினரும், பொதுமக்களும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் செய்திகள்