டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சேலத்தில் தமிழ் தேசிய மலைநாடு மக்கள் கட்சியினர் உண்ணாவிரதம்
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், தமிழக விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற
சேலம்,
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், தமிழக விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற மறுக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் சேலத்தில் நேற்று தமிழ் தேசிய மலைநாடு மக்கள் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த உண்ணாவிரதத்திற்கு கட்சியின் தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் வேலாயுதம் வரவேற்றார். மாநில பொருளாளர் மாது, தமிழக விவசாய சங்கத்தின் மாநில தலைவர் வெங்கடாசலம், ஆதி திராவிடர் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ராஜகோபால் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், விவசாயிகளும் பலர் கலந்து கொண்டனர். அப்போது, சிலர் தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து பேசினர். இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் சிலர், வேளாண் கருவிகளை கொண்டு வந்திருந்தனர்.