அனுமதியின்றி மணல் அள்ளி வந்த லாரி, ஜே.சி.பி. எந்திரம் பறிமுதல் டிரைவர் கைது
மானாமதுரை அருகே வன்னிக்குடி, கரிசல்குளம் பகுதியில் அனுமதியின்றி சவடு மணல்
மானாமதுரை,
மானாமதுரை அருகே வன்னிக்குடி, கரிசல்குளம் பகுதியில் அனுமதியின்றி சவடு மணல் அள்ளப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையிலான போலீசார் கரிசல்குளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பகுதியில் சிலர் அனுமதியின்றி மணல் அள்ளி கொண்டிருந்தது தெரியவந்தது. போலீசார் வருவதை அறிந்த மணல் அள்ளியவர்கள் தங்களது லாரி, ஜே.சி.பி. எந்திரத்தை விட்டுவிட்டு தப்பியோடினர். உடனே போலீசார் அவர்களை துரத்தினர். இருப்பினும் ஒருவர் மட்டுமே பிடிபட்டார். விசாரணையில் பிடிபட்டவர் ஜே.சி.பி. எந்திர டிரைவர் சிவசுப்பிரமணியன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அனுமதியின்றி மணல் அள்ளியதாக சிவசுப்பிரமணியத்தை கைது செய்து, லாரி மற்றும் ஜே.சி.பி. எந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.