காலத்தை வென்ற பெண் புலவர்கள்
சங்க காலத்தை, இலக்கியத்தின் “பொற்காலம்” என வரலாற்று ஆசிரியர்கள் வர்ணிக்கிறார்கள்.
அந்தளவிற்கு வீரம், பாசம், காதல், தாய்மை, இயற்கை, ஆன்மிகம் என அனைத்து குறித்தும் புலவர்கள் பாடல்களை பாடி இருக்கின்றனர். அந்த காலத்தில் ஆண் புலவர்களுக்கு நிகராக பெண் புலவர்களும் இருந்திருக் கிறார்கள் என்பது பெண்ணினத்திற்கு பெருமை சேர்க்கக்கூடியது. மேலும், பெண் புலவர்கள் பாடாத பாடல்களே இல்லை என்னும் அளவிற்கு ஏராளமான பாடல்களை அவர்கள் பாடி உள்ளனர். அவ்வையார் அதில் குறிப்பிடத்தக்கவர்.
சங்க காலத்து பெண் புலவர்களில் பொன்முடியாரும் பிரபலமானவர். ‘தகடூர் யாத்திரை’ என்னும் நூலில் இவரது பாடல்கள் இடம் பெற்றுள்ளன. கடமை குறித்து சிறப்பாக பாடல்களை பாடியவர் என்ற பெயரும் இவருக்கு உண்டு. ஒவ்வொருவரும் தங்கள் கடமையில் சிறந்து விளங்க வேண்டும் என்றும், அப்போது தான் நாடும் தனது கடமையில் சிறந்து விளங்கும் என்றும் தன் பாடலில் எடுத்துரைக்கிறார் பொன்முடியார்.
வெள்ளி வீதியார் என்ற பெயர் கொண்ட பெண் புலவர் அவ்வையார் காலத்திற்கும் முற்பட்டவர். இவரின் பல பாடல்கள் நமக்கு கிடைக்கவில்லை. பதின்மூன்று பாடல்களே நமக்கு கிடைத்துள்ளன. அவைகள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணையில் இடம் பெற்றுள்ளன.
பெண் புலவர்களில் வெண்ணிக்குயத்தியாருக்கு தனி இடம் உண்டு. வெண்ணி என்னும் ஊரில் பிறந்ததாலும், குயவர் குடியில் இருந்து வந்ததாலும் இவருக்கு இந்த பெயர் வந்தது. இவரின் பாடல் புறநானூறில் உள்ளது. மன்னர் கரிகாலனை பற்றி பல பாடல்கள் பாடி உள்ளார். கரிகாலனை ‘வீரன்’ என்று புகழ்ந்த வெண்ணிக்குயத்தியார், சேர மன்னனை ‘நல்லன்’ என்று தன் பாடலில் போற்றி உள்ளார். இவரின் ஒரே ஒரு பாடல் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது.
சோழ மன்னர் கரிகால் வளவனின் மகள் ஆதிமந்தியார். இவர் பேரழகி ஆவார். ஆடல் கலையில் மட்டுமின்றி கவி பாடுவதிலும் சிறந்து விளங்கினார். தன் காதலனை ஆற்று வெள்ளம் அடித்து சென்றது. அதனால் காவிரி செல்லும் வழியே சென்று கடலை அடைந்தாள். அங்கு கடற்கரையில் நின்று ‘கல்லினை ஒத்த தோளினை உடைய நீ எங்குள்ளாய்’ என்று வினவவும், கடல் காதலனை கொண்டு வந்து சேர்த்தது.
அவனை கட்டி தழுவிக்கொண்டார் ஆதிமந்தியார். காதலனை பிரிந்த சோகத்தில் இவர் பாடிய பாடல் குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளது.
நப்பசலையாரும், சங்க காலத்து சிறப்பு மிக்க பெண் புலவர். பாண்டிய நாட்டில் உள்ள ‘மாறோக்கம்’ என்னும் சிற்றூரில் பிறந்தார். தலைவன் தலைவியை மணம் புரிய காலம் கடத்துகிறான். காதலியிடம் வந்து பேசியும், இன்பம் துய்த்தும் செல்கிறான். ஆனால் திருமணம் செய்யவில்லை. இந்த சோகத்தை வெளிப்படுத்தும் பாடல்களை இவர் சிறப்பாக பாடி உள்ளார். அவை நற்றிணை, புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.
தென்பாண்டி நாட்டை ஆண்டு வந்த மன்னர்களில் பூதப்பாண்டியன் என்பவரும் ஒருவர். இவரின் மனைவி பெருங்கோப்பெண்டு. இவர் சிறந்த புலமை பெற்று விளங்கினார். பாண்டிய நாட்டு வட எல்லையில் ‘ஒல்லையூர்’ என்ற பகுதி இருந்தது. அதை சோழ மன்னர்கள் போரிட்டு கைப்பற்றிக் கொண்டனர். அந்த பகுதியை இழந்ததை பெரிய அவமானமாக பூதப்பாண்டியன் கருதினார். இதையடுத்து போரிட்டு மாபெரும் வெற்றியடைந்து அந்த பகுதியை கைப்பற்றினார்.
அதனால் பூதப்பாண்டியன், ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் என்றும் அழைக்கப்பட்டார். இந்த மகிழ்ச்சி நீண்ட நாள் நிலைத்திருக்கவில்லை. பூதப்பாண்டியனாரின் மகத்தான வெற்றி சேர, சோழ மன்னர்களை பெரிதும் பொறாமை கொள்ள வைத்தது. இதனால் மீண்டும் போர் தொடங்கியது. அந்த போரில் பூதப்பாண்டியன் வீரமரணம் அடைந்தார். கணவர் இறந்த பின் பெருங்கோப்பெண்டு உயிர் வாழ விரும்பவில்லை. அதனால் சுடுகாட்டில் ஈமத்தீ வளர்த்து அதில் உயிர் துறந்தார் பெருங்கோப்பெண்டு. பூதப்பாண்டியரை எதிர்த்து சேர, சோழ மன்னர்கள் போர் தொடங்குவதற்கு முன்னால் இந்த பெண் புலவர் பாடிய பாடல் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது.
சங்க கால பெண் புலவர்களில் ஒக்கூர் மாசாத்தியாரும் ஒருவர். இவர் பாடிய பாடல்கள் புறநானூறு, அகநானூறு, குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளன. இவருடைய பாடல்களில் உவமைகள் அதிகமாக சொல்லப்பட்டுள்ளது. அதனால் இவர் சிறப்பாக போற்றப்படுகிறார்.
வீரர்களை பெற்றெடுத்த தாய்மார்களை பாராட்டி வீரப்பாடல்களை பாடியவர், காக்கை பாடினியார். இவர் காக்கையை பற்றி சிறப்பாக பாடிய காரணத்தால் ‘காக்கை பாடினியார்’ என்ற சிறப்பு பெயர் பெற்றார். சேர நாட்டின் ஒரு பகுதியை சேரலாதன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அந்த மன்னனின் புகழை அறிந்த காக்கை பாடினியார் மன்னனிடம் சென்று பாடல்கள் பாடினார். அந்த பாடலில் உள்ள சிறப்பை அறிந்து பாராட்டிய மன்னன் சேரலாதன் பரிசுகள் வழங்கியதோடு தன் அரசவை புலவராக்கி மகிழ்ந்தான். அவர் பாடிய பாடல் பதிற்றுப்பத்தில் இடம் பெற்றுள்ளது. இவர், தன் புலமையால் மன்னருக்கு சரிசமமாக அமரும் அந்தஸ்து பெற்றதால் ‘பக்கத்து கொண்டான்’ என்ற சிறப்பு பெயரும் பெற்றிருந்தார்.
சங்ககால பெண் புலவர்களில் நக்கண்ணையார், பூங்குன்றன் உத்தரையார் போன்றவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.