திருமணமான 5 மாதத்தில் கர்ப்பிணி மர்ம சாவு கணவர் கைது
ஜெயங்கொண்டம் அருகே திருமணமான 5 மாதத்தில் கர்ப்பிணி மர்மமான முறையில் இறந்தார். இதுதொடர்பாக அவரது கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கோனுலாம் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 48). சலவை தொழிலாளி. இவருடைய மகள் ஆனந்திக்கும் (22), அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரியமணல் கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் மகன் ஆனந்த்ராஜ் (30) என்பவருக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. இதையடுத்து ஆனந்தி, ஆனந்த்ராஜ் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். தற்போது ஆனந்தி 3 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
ஆனந்த்ராஜ் சிம்கார்டு விற்பனை செய்யும் வேலை பார்த்து வருகிறார். இவர் வீட்டில் இருக்கும்போது செல்போனில் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பாராம். மேலும் வேறொரு பெண்ணிடம் தொடர்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த ஆனந்தி இதுகுறித்து ஆனந்த்ராஜிடம் கேட்டார். இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
மர்ம சாவு
இந்த நிலையில் இதுகுறித்து நேற்று முன்தினம் ஆனந்தி தனது தாய்க்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது ஆனந்தி அழுததுடன் தற்கொலை செய்து கொள்ள மாட்டேன் என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இரவு ஆனந்தி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை சீனிவாசனுக்கு ஆனந்த்ராஜ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து சீனிவாசன் சூரியமணல் கிராமத்திற்கு விரைந்து வந்து ஆனந்தியின் உடலை பார்த்து கதறி அழுதார்.
கணவர் கைது
பின்னர் சீனிவாசன் தனது மகளின் சாவில் மர்மம் உள்ளதாக கூறி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்சாமி வழக்குப்பதிவு செய்து ஆனந்த்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ஆனந்தியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருமணம் ஆகி 5 மாதமே ஆவதால் ஆனந்தியின் சாவு குறித்து உடையார் பாளையம் வருவாய் கோட்டாட்சியர் டீனாகுமாரி விசாரித்து வருகிறார்.